பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை அரசு குறைக்ககோரி வலியுறுத்தல்: ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர்…

Author: Udhayakumar Raman
1 December 2021, 5:52 pm
Quick Share

அரியலூர்: பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு குறைக்ககோரி பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அரியலூர் மாவட்ட பா.ஜ.க வர்த்தக அணி மற்றும் எஸ்.டி, பட்டியலின அணி சார்பில் தமிழக அரசினை கண்டித்தும், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியினை தமிழக அரசு குறைக்க வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக அரசை கண்டித்தும், திமுக அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Views: - 126

0

0