நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்
17 November 2020, 7:18 pmபுதுச்சேரி: தொகுதி பணிகளுக்கு நிதி ஒதுக்கியும் அடிப்படை வசதிகளை செய்ய மறுக்கும் நகராட்சி அதிகாரிகளை கண்டித்து புதுச்சேரியில் பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதியில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய நியமன சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து நிதி ஒதுக்கியும் இதுவரை பணிகளை மேற்கொள்ளாத உழவர்கரை நகராட்சி அதிகாரிகளை கண்டித்து உழவர்கரை நகராட்சி அலுவலகத்தை பாரதிய ஜனதா கட்சியின் நியமன சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர், அப்போது அவர்கள் நிதி ஒதுக்கியும் அடிப்படை வசதிகளை செய்துதர மறுக்கும் அதிகாரிகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.