ஏரியில் அழுகிய நிலையில் வாலிபர் சடலம் கண்டெடுப்பு…. கொலையா? தற்கொலையா? என விசாரணை

Author: kavin kumar
14 August 2021, 4:29 pm
Quick Share

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் அழுகிய நிலையில் வாலிபர் சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மிதப்பதாக ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினருக்கு தகவல் வந்ததையடுத்து விரைந்து சென்ற ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் அடையாளம் தெரியாத அழுகிய நிலையில், இருந்த வாலிபர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சடலத்தை அடையாளம் காண முடியாததால் கொலையா? தற்கொலையா? அல்லது தவறி விழுந்து உயிரிழப்பா? என்று பல கோணத்தில் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Views: - 228

0

0