மூன்று நாட்களுக்கு முன்பு காணாமல் போன இளைஞர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
Author: kavin kumar21 August 2021, 1:57 pm
வேலூர்: மூன்று நாட்களுக்கு முன்பு காணாமல் போன இளைஞர் சதுப்பேரி பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்மாவட்டம்,வேலூர் கஸ்பா அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்ற இளைஞர் (தனியார் உணவக ஊழியர்) இவர் 3 நாட்களுக்கு முன் காணாமல் போன நிலையில் இன்று காலை சதுப்பேரியில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து பாகாயம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இளைஞரின் உடலை கிணற்றில் இருந்து மீட்டு பிரேதபரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Views: - 597
0
0