தாத்தா, பாட்டியை தீ வைத்துக் கொன்ற பேரன் கைது: சேலத்தில் அரங்கேறிய கொடூர சம்பவம்

Author: Udhayakumar Raman
13 September 2021, 7:29 pm
Quick Share

சேலம்: பெரியப்பா குடும்பத்துடன் தன்னுடைய குடும்பத்தை ஒப்பிட்டு பேசியதால், ஆத்திரமடைந்த சிறுவன், தாத்தா, பாட்டியை வீட்டுக்குள் வைத்து பூட்டி தீ வைத்து கொலை செய்த கொடூர சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது.

சேலம் மாவட்டம் கொத்தாம்பாடியைச் சேர்ந்த காட்டுராஜா – காசியம்மாள் தம்பதியின் முதல் இரண்டு பிள்ளைகளும் திருமணமாகி, குடும்பத்துடன் செல்வ செழிப்பாக வசித்து வரும் நிலையில், மூன்றாவது மகன் கூலி வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், முதல் மகன் குடும்பத்துடன் மூன்றாவது மகன் குடும்பத்தை ஒப்பிட்டு, காட்டுராஜாவும், காசியம்மாளும் அவ்வப்போது தரக்குறைவாக பேசியதாகவும் அந்த ஆத்திரத்தில் அவர்களது 16 வயது மகன், தாத்தா, பாட்டியை வீட்டுக்குள் வைத்து பூட்டி வீட்டுக்கு தீ வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. சிறுவனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 133

0

0