அடகுக் கடையில் நகை பையை தூக்கி கொண்டு ஓடிய சிறுவன்

Author: Udayaraman
8 October 2020, 10:53 pm
Quick Share

வேலூர்: காட்பாடியில் அடகுக் கடையில் நகை பையை தூக்கி கொண்டு ஓடிய சிறுவனுக்கு தர்ம அடி கொடுத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

பழைய காட்பாடியில் சாலையோரம் நகை அடகு கடை ஒன்று உள்ளது. இதன் உரிமையாளர் இன்று காலை நகை பையுடன் வந்து கடையை திறக்க வந்தார். பையைக் கீழே வைத்துவிட்டு கதவை திறந்து கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட 8 வயது சிறுவன் ஒருவன் திடீரென அருகே வந்து நகை பையை தூக்கிக் கொண்டு ஓடினான். இதனால் அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் கூச்சலிட்டபடி அவனை துரத்தி சென்றார். பழைய காட்பாடி மெயின் ரோட்டில் ஓடிய சிறுவனை அப்பகுதி பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். மேலும் சிறுவனுக்கு தர்ம அடி கொடுத்தனர்.

இதுபற்றி காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் சிறுவன் மதுரையை சேர்ந்தவர் என்பதும் வளையல் வியாபாரத்திற்காக பெற்றோருடன் காட்பாடிக்கு வந்தது தெரியவந்தது. பசியின் காரணமாக பையில் சாப்பாடு இருப்பதாக நினைத்துக்கொண்டு அதனை எடுத்துகொண்டு ஓடியதாக அவன் கூறினான். போலீசார் தொடர்ந்து சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 34

0

0