2 வயதில் 3 உலக சாதனை படைத்த சிறுவன்: சிறுவனுக்கு குவியும் பாராட்டு

Author: Udhayakumar Raman
16 September 2021, 7:26 pm
Quick Share

தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே 2 வயதில் 3 உலக சாதனை படைத்துள்ள சிறுவனை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம் உரந்தைராயன்குடிக்காட்டைசேர்ந்த வசந்தகுமார்-கவிமொழி. இவர்களது 2 வயது மகன் கவின் பிறந்து 22 மாதங்களில் விளையாட்டுத்தனமாக இருந்தபொழுது அவரது தாய் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கொடிகள் மற்றும் பழங்களின் பெயர் சொல்லி கொடுத்துள்ளார்.இதில் ஆர்வமாக இருந்த குழந்தை கவின் நாளடைவில் அந்தந்த நாட்டின் கொடிகள் பெயர்கள் மற்றும் பழங்களின் பெயர்கள் பறவைகளின் பெயர்கள் விலங்குகளின் பெயர்கள் சொல்லும்பொழுது அந்த புகைப்படத்தின் தனது தாயிடம் கொடுத்துள்ளார்.

தனது மகனின் அபார திறமையை பார்த்த தாய் கவிமொழி ஜெட்லி புக் ஆப் ரெக்கார்டு அனுப்பியுள்ளார் .இதில் பங்கு பெற்ற சிறுவன்கவின் 197 நாடுகளின் தேசிய கொடிகளை அடையாளப்படுத்தி ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார். இது இவரின் மூன்றாவது சாதனையாகும். சிறுவன் கவின் தனது ஒன்றேமுக்கால் வயதில் “இந்தியா புக் ஆப் ரெக்கார்ஸ்” சாதனையாளர் புத்தகத்திலும், “கலாம் உலக சாதனையாளர்” புத்தகத்திலும் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். சிறுவனின் இந்த அபார அறிவு வளர்ச்சியை பார்த்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Views: - 123

1

0