சிஐடியு தொழிற்சங்கத்தினர் சட்டமன்றத்தை முற்றுகையிட முயற்சி
Author: kavin kumar26 October 2021, 4:03 pm
புதுச்சேரி: புதுச்சேரியில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் மற்றும் பண்டிகை கால உதவித் தொகையை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தினர் சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் மற்றும் பண்டிகை கால உதவித் தொகையான 2 ஆயிரம் ரூபாயை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தினர் 200க்கும் மேற்பட்டோர் காமராஜர் சிலையில் இருந்து ஊர்வலமாக வந்து சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்றனர், ஆனால் சட்டப்பேரவை அருகே காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து அவர்களை தடுக்க முயன்றனர், இதனால் காவல்துறையினர் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
0
0