திருக்கோவிலூரில் நடைபெற்றுவரும் பல்வேறு பணிகளை ஆட்சியர் நேரில் ஆய்வு

23 June 2021, 8:24 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் பகுதியில் நடைபெற்றுவரும் பல்வேறு பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, முதலூர், எல்ராம்பட்டு, காட்டுப்பையூர் உள்ளிட்ட பகுதிகளில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் திடீரென நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது முதலூர் கிராமத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு முறையாக தடுப்பூசி போடபடுகின்றனவா என்றும், அதற்கான விழிப்புணர்வு பணிகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபடுகின்ரனரா எனவும் மேலும், தினசரி தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கையை கூட்ட சுகாதாரத்துறையினர் வீடு வீடாக வீதி வீதியாக சென்று விழிப்புணர்வை வழங்க வேண்டும் என்றும் அங்கிருந்த சுகாதார துறையினருக்கு அவர் அறிவுறுத்தினார்.

அதேபோன்று, எல்ட்ராம்பட்டு மற்றும் காட்டுப்பையூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஏரிக்கரைகளிலும், சாலையோரங்களிலும் மரம் நடும் பணியை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர், இந்த ஆய்வின் போது சரியான இடைவெளியில் மரங்கள் நடப்படுகின்றனவா எனவும், தரமான மரங்கள் நடப்படுகின்றனவா எனவும், அதனை பராமரிக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இந்நிகழ்வில், வருவாய் துறை, சுகாதாரத் துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Views: - 40

0

0