நொடியில் முடிந்த சைக்கிள் பயணம்

23 November 2020, 9:47 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் சைக்கிளின் சென்ற நபர் மயங்கி விழுந்து மரணமடைந்தார்.

திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரியமங்கலம் மேம்பாலம் பகுதியில் சைக்கிளில் சென்ற ஒருவர் திடீரென எதிர்பாரத விதமாக தடுமாறி சைக்கிளிலிருந்து மயங்கி விழுந்தார். இதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்த பார்த்த போது அந்த நபர் அதே இடத்தில் உயிரிழந்தது தெரிய வந்தது.

பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்த அந்த நபர் திருச்சி திருவனைக்காவல் அடுத்துள்ள கீழக்கொண்டையம் பேட்டையை பகுதியை சேர்ந்த சண்முகம் தெரிய வந்துள்ளது.

Views: - 0

0

0