மாட்டுச்சந்தைக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வியாபாரிகள் கோரிக்கை

20 October 2020, 2:00 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் 7 மாதங்களுக்கு பிறகு கூடிய மாட்டுச்சந்தை அடிப்படை வசதிகள் செய்து தர அரசுக்கு வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புதுச்சேரியில் மதகடிப்பட்டு பகுதியில் பிரெஞ்சு காலத்திலிருந்து மிகவும் புகழ்பெற்ற மாட்டு சந்தை இயங்கி வருகிறது. வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் இயங்கும் இந்த சந்தையில் புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவது வழக்கம். மாடுகள் மட்டுமல்லாமல் விவசாயம் சார்ந்த அனைத்து பொருட்களும் இந்த சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா நோய் தொற்று காரணமாக சந்தை இயங்குவதற்கு அரசு தடைவிதித்திருந்தது.

தற்போது ஊரடங்கு தளர்வு அளித்துள்ள நிலையில் சமூக இடைவெளியுடன் சந்தை இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி 7 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் சந்தை தொடங்கியது. கொரோனா நோய் தொற்று காரணமாக குறைத்த அளவிலான வியாபாரிகள் மட்டுமே சந்தைக்கு வந்தனர். மேலும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக சந்தையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி சுகாதார மற்ற சூழல் நிலவுகிறது. எனவே சந்தை இயங்கவதற்கு உரிய அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 13

0

0