முககவசம் அணியாத நபர்களிடம் சுகாதார துறையினர் அபராதம் வசூலிப்பு

Author: Udayachandran RadhaKrishnan
17 March 2021, 5:18 pm
Quick Share

ஈரோடு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஈரோட்டில் முககவசம் அணியாத நபர்களிடம் சுகாதார துறையினர் அபராதம் வசூலித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டார். முககவசம் அணியாத நபர்களிடம் சுகாதார துறையினர் மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் வசூலித்து வருகின்றனர்.

பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களான பன்னீர்செல்வம் பூங்கா, ஆட்சியர் அலுவலகம், வ.உ.சி பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்காத நபர்கள் மற்றும் கடைகளுக்கு அபராதம் விதித்தும் சீல் வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் கதிரவன் மேற்கொண்ட ஆய்வில் 2கடைகளுக்கு சீல் வைத்தும் 5 கடைகளுக்கு தலா 25ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 44

0

0