அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் காவல் துணை ஆணையாளர் ஆலோசனை

Author: Udhayakumar Raman
18 March 2021, 5:48 pm
Quick Share

சென்னை: மாத்தூரில் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் குறித்தும் , தேர்தல் நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என காவல் துணை ஆணையாளர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாதவரம் காவல் மாவட்டத்தின் சார்பில் மாதவரம் காவல் துணை ஆணையாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் மாதவரம் அடுத்த மாத்தூர் பகுதியில் அனைத்து கட்சியின் வேட்பாளர்கள் நிர்வாகிகளுக்கு தேர்தல் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுவாக எந்த ஒரு அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் அல்லது வேட்பாளர்கள் சாதி மதம் மற்றும் மொழியினரின் வேறுபாட்டை ஏற்படுத்தும் விதத்தில் நடக்க கூடாது எனவும், கண்டிப்பாக இரவு 10 மணி முதல் காலை 6 வரை பிரச்சாரம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது எனவும்,

வாகனங்களில் வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர்களை அழைத்து வரக்கூடாது மற்றும் வீடு வீடாக பிரச்சாரம் செய்யும் போது ஐந்து நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கூறினார். மேலும் முககவசம் அனியவேண்டும் பணப்பட்டுவாடா செய்யவேண்டாம் எனவும், அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் போலீசார் உள்ளனர் எனவும், தேர்தல் விதிமுறைகளை கருத்தில் கொண்டு தேர்தலை சுமூகமாக முறையில் நடத்திட அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு தரவேண்டும் என துணை ஆணையாளர் கிருஷ்ணராஜ் அறிவித்தார்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையில் இயங்கும் தொலைபேசி எண் 04427661950 மற்றும் புகார்கள் இருந்தால் அறிவிக்கப்படலாம் என்றும், அல்லது வாட்ஸ்அப் எண் 9445911161 மூலம் புகார்களை தெரிவிக்கலாம் என்று புகார் என்னை தெரிவித்தார். இதில் அனைத்து கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Views: - 121

0

0