சிறுமியிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய கார் ஓட்டுநர் கைது

Author: Udhayakumar Raman
19 September 2021, 1:28 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுமியிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய கன்னியாகுமரியை சேர்ந்த கார் ஓட்டுனரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்புகளை கவனித்துக்கொண்டு இருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது அதில் எதிர்முனையில் பேசிய மர்ம நபர் சிறுமியிடம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளளர். அவர்கள் சிறுமியிடம் மர்ம நபர் ஆபாசமாக பேசியது தொடர்பாக முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அவர்கள் அளித்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் இளவரசன் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமிக்கு அழைப்பு வந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அச்சிறுமியிடம் ஆபாசமாக பேசியது கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் லாசர் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து முதலியார்பேட்டை போலீசார் உடனடியாக கன்னியாகுமரி விரைந்து சென்று லாசரை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். 

Views: - 196

0

0