எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரம் பலன் அளிக்கவில்லை: வேலூர் இப்ராஹிம் பேட்டி…

20 September 2020, 5:54 pm
Quick Share

நீலகிரி: மக்களிடையே நாளுக்குநாள் பாஜகவின் நம்பிக்கை என்பது அதிகரித்துக் கொண்டே உள்ளதால், எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரம் பலன் அளிக்காமல் அவர்களின் முகத்திரையைக் கிழித்துள்ளதாக தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் மாநில தலைவர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் மாநில தலைவர் வேலூர் இப்ராஹிம் கடந்த 7 ம் தேதி முதல் மத்திய அரசின் செயல்திட்டங்களை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கி கன்னியாகுமரியில் யாத்திரையை துவக்கினார். அதன் தொடர்ச்சியாக இன்று நீலகிரி மாவட்டம் உதகையில் மத்திய அரசின் செயல்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், “பா.ஜ.க அரசை காங்கிரஸ், திமுக கம்யூனிஸ்ட், உள்ளிட்ட கட்சிகள் அவதூறாக பேசி மக்களிடையே பொய் பிரச்சாரத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது.

ஆனால் மக்களிடையே நாளுக்குநாள் பாஜகவின் நம்பிக்கை என்பது அதிகரித்துக் கொண்டே உள்ளன. இதனால் எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரம் பலன் அளிக்காமல் அவர்களின் முகத்திரையைக் கிழித்துள்ளதாக கூறினார். மேலும் பாஜக இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி எனவும், உயர்குடிமக்களுக்கான கட்சி எனவும், திமுக பெய் பிரச்சாரம் மேற்கொண்டு வந்ததை தற்போது முறியடிக்கப்பட்டு பாஜக மாநில தலைவராக பட்டியலினத்தவர் நியமிக்கப்பட்டும் பாஜகவின் மக்கள் நலத்திட்டங்கள் இஸ்லாமிய மக்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிக சட்டமன்ற உறுப்பினர்களோடு தமிழகத்திற்கு யார் முதல்வர் என்று தீர்மானிக்கும் சக்தியாக திகழும். மேலும் பிரதமரின் நலத்திட்டங்கள் தமிழக அரசு மூலம் பொது மக்களிடம் மறைக்கப்பட்டு வருகிறது . குறிப்பாக பிரதான் மந்திரி கிசான் நிதி திட்டத்தில் தமிழகம் முழுவதும் 110 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் அடிப்படையில் குடிசை வீடுகள் கட்டங்களாக மாற்றப்பட்டு வருகிறது .

இந்தத் திட்டத்திலும் தமிழகத்தில் ஏறக்குறைய 300 நபர்களின் பேரில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் இந்த திட்டத்தின் அடிப்படையில் அதிக முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த நலத்திட்டங்களின் ஊழலில் அரசு அலுவலர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். தமிழக அரசு கட்டாயமாக இதனை கண்டறிந்து தண்டிக்க வேண்டும். மேலும் முக்கியமாக நீலகிரி மாவட்டத்தில் இந்த திட்டத்தின் அடிப்படையில் அதிக முறைகேடுகள் நடந்துள்ளன. இதுகுறித்து தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கவனம் செலுத்தி நலத்திட்டங்கள் மூலம் பொதுமக்கள் பயனடையும் விதமாக சரிப்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பிரதமர் செய்த அனைத்து நலத்திட்டங்களும் இந்த முறைகேடுகளின்,மூலம் தெரிய வருகிறது. தேசப்பற்றினையும் ,தமிழர் நலனையும் பாதுகாக்க கொள்கைப் பிரச்சாரம் மனித நேயம், மத நல்லிணக்கம் ஆகியவற்றை மாற்றக்கூடிய இடத்தில் தமிழக அரசு உள்ளது. முக்கியமாக அனைவருக்கும் வீடு திட்டத்தில் நீலகிரியில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் வேறு நபர்கள் முக்கியமாக கட்சிக்காரர்கள் மூலம் ஊழல் நடந்து இருக்கிறது. இது குறித்து பாஜக மாவட்டத் தலைவர் புகார் அளிக்கும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தில் புகார் மனு அளிக்கப்படும். மேலும் முக்கியமாக பிரதமரின் 5 லட்சம் மருத்துவ காப்பீடு திட்டம் பிரதமரை சிறுமைப்படுத்தும் விதமாக தமிழக அரசு திட்டம் என்று கூறுவது ஏற்க முடியவில்லை.

இந்த காப்பீட்டுத் திட்டத்தினை தமிழக அரசின் திட்டம் என்று தமிழக அரசு கூறிக்கொள்கிறது .இதனால் திமுக ,தமிழக அரசு பற்றி பிரச்சாரம் செய்வது உண்மை போன்று காணப்படுகிறது. மேலும் பாஜக வின் இந்த பிரச்சாரம் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களிலும் நடைபெற இருக்கிறது மற்றும் அனைத்து கடைகளிலும் பிரதமர் மோடியின் சிறப்பு திட்டங்கள் பற்றிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட உள்ளது எனவும் கூறினார்.

Views: - 0

0

0