வன்னியர் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கியதற்கு 115 ஜாதிய சமூக அமைப்புகளின் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு

11 July 2021, 2:38 pm
Quick Share

மதுரை: மதுரையில் தனியார் அரங்கில் நடைபெற்ற MBC/ DNT சமூகங்களின் 115 ஜாதிய சமூகநீதி கூட்டமைப்பு சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அந்தக் கூட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் வன்னிய சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல் இந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்கறிஞரும் சமூக செயல்பாட்டாளரான ரஜினி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கடந்த அதிமுக ஆட்சி கொண்டு வந்த வன்னியர் 10.5% உள் இட ஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் ஏனென்றால் ஏறக்குறைய 115 சமூகங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. அவர்களுக்கான கல்வி வேலைவாய்ப்பில் உள்ள உரிமைகள் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இதை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த சமூக நீதி கூட்டமைப்பு ஏறக்குறைய 115 அமைப்புகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் தலைவர்களும் வந்திருக்கின்றார்கள்.

எங்களின் முக்கிய கோரிக்கையை என்னவென்றால் திமுக அரசு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பதற்கு முன் செயல்படுத்தக் கூடாது குறிப்பாக வேலைவாய்ப்பு , மெடிக்கல் மற்றும் துறைகளில் அனுமதிக்கக் கூடாது. ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்துவதற்கு அமைக்கப்பட்ட ஆணையம் இதுவரை எந்த அறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை இந்நிலையில் இந்த 10.5 சதவீத இட ஒதுக்கீடு அனுமதிக்க முடியாது. என்றனர்.’

Views: - 81

0

0