ரவுடியை ஓட ஓட வெட்டி கொலை செய்த 5 பேர் கொண்ட கும்பல்

9 September 2020, 7:57 pm
Quick Share

சென்னை: புளியந்தோப்பு அருகே ரவுடியை 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புளியந்தோப்பு டிம்லஸ் சாலை பகுதியில் வசிப்பவர் பிரபல ரவுடி ரமேஷ்பாபு என்கிற நாய் ரமேஷ்(வயது 34). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இன்று இரவு பேசின்பிரிட்ஜ் குருசாமி நகர் பிரதான சாலை அருகே நடந்து வரும் பொழுது இரண்டு இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணிந்து வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து ஓட ஓட சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேசின் பிரிட்ஜ் காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ரமேஷ் பாபு மீது கடந்த 2016 ஆம் ஆண்டு புழல் காவங்கரை பகுதியில் ரவுடி சிவராஜை கொலை செய்த வழக்கு மற்றும் 3 கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது.

மேலும் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ரவுடி சிவரஜை கொலை செய்தற்காக பழிக்கு பழி இந்த கொலை நடந்துள்ளதா அல்லது கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட தொழில் போட்டியில் கொலை நடந்துள்ளதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரவுடியை தனது வீட்டின் அருகே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0