காமராஜரின் பிறந்த நாளை அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்: எர்ணாவூர் நாராயணன் வலியுறுத்தல்

Author: Udhayakumar Raman
22 July 2021, 5:29 pm
Quick Share

சென்னை: பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை அரசு பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் எனவும் , குரோம்பேட்டையில் வியாபாரியை வெட்டி படுகொலை செய்த ரவுடிகள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் எர்ணாவூர் நாராயணன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை மாத்தூரில் பெருந் தலைவர் காமராஜ் அவர்களின் 119 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய எர்ணாவூர் நாராயணன்,

வியாபாரி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு காரணமான ரவுடிகள் மீது விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நடடிக்கை எடுக்க வேண்டும். மேலும் , அந்த வியாபாரியின் குடும்பத்திற்கு காவல் துறையினர் தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.முத்தமிழ் அறிஞர் கலைஞர் காலத்தில் பெருந்தலைவரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட ஆணை வழங்கினார்.அதே போல் , தற்போது பெருந்த தலைவரின் பிறந்த நாளை அரசு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு எர்ணாவூர் நாராயணன் கோரிக்கை வைத்தார்.

Views: - 106

0

0