விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி:பி.ஆர். பாண்டியன் பேட்டி

Author: kavin kumar
19 November 2021, 4:35 pm
Quick Share

திருவாரூர்: பாராளுமன்ற கூட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக தீர்மானம் நிறைவேற்றி, சட்டமாக்கும் வரை விவசாயிகள் போராட்டம் தொடரும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்ததை தொடர்ந்து மன்னார்குடி காந்தி சிலை அருகே வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் விவசாயிகளோடு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராடி வந்த நிலையில் விவசாயிகள், இன்று பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கிறார். இது விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறோம், பாராளுமன்ற கூட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக தீர்மானம் நிறைவேற்றி, சட்டமாக்கும் வரை விவசாயிகள் போராட்டம் தொடரும், இந்த மாபெரும் வெற்றி என்பது ஒட்டுமொத்த இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி இதனை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Views: - 389

0

0