பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்

23 November 2020, 4:07 pm
Quick Share

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் பெரியார்திடலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மலைவாழ் மக்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பெரியார்திடலில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் 2006 வன உரிமை சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தவேண்டும், அனைத்து பழங்குடி மக்களுக்கும் கால தாமதமில்லாமல் ஜாதிச்சான்றிதழ் வழங்கவேண்டும், 2020 சுற்றுச்சூழல் சட்டத்தை வாபஸ் பெறவேண்டும், அனைத்து பழங்குடி மக்களுக்கும் இலவசவீட்டு மனைப்பட்டா வழங்கி கேரளா அரசாங்கத்தைப் போல் ரூ.6 லட்சம் மதிப்புள்ள தரமான தொகுப்பு வீடு கட்டிக் கொடுத்திடவேண்டும், பழங்குடி மக்கள் நிலத்தை பழங்குடி அல்லாதவர்களுக்கு பத்திரப்பதிவு செய்வதை தடை செய்யவேண்டும்,

சத்தி, பர்கூர் மலை வட்டாரத்தில் மரவள்ளிக்கிழங்கு கொள்முதலில் வெட்டுக்கூலி வண்டி வாடகை உள்ளிட்ட பிரச்சனை பேசி தீர்வுகாண முத்துரப்பு கூட்டத்தை கூட்டவேண்டும், ஈரோடு மாவட்ட மலைவாழ் மக்களுக்கு மலையாளி என சாதிச்சான்றிதல் வழங்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பர்கூர், கடம்பூர், தாளவாடி உள்ளிட்ட மலைப்பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். அதனை தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் ஜெயராமனிடம் அளித்தனர்.

Views: - 0

0

0