முத்தையா முரளிதரன் வரலாற்று படம் பல விவகாரங்களை திசை திருப்பும்: முத்தரசன் பேட்டி

Author: Udayaraman
15 October 2020, 10:47 pm
mutharasan byte UpdateNews360
Quick Share

திருச்சி: முத்தையா முரளிதரன் வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை எதிர்ப்பது என்பது பல விவகாரங்களை திசை திருப்பும் வகையில் உள்ளதாக முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:- உயர்நீதிமன்றம் இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மத்திய அரசு மருத்துவ படிப்பில் ஒ.பி.சி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு தர முடியாது என திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக மத்திய அரசு துரோகம் இழைப்பதை காட்டுகிறது.

இதனை வன்மையாக கண்டிக்கிறோம். பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே நிறைவேற்ற வேண்டும். ஜி.எஸ்.டி விவகாரத்தில் மத்திய அரசு மாநில அரசை ஏமாற்றி உள்ளது.கொடுக்க வேண்டிய மானியத்தை கொடுக்காமல் மாநில அரசை கடன் வாங்க கூறுவது கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக சட்டங்களை இயற்றி விட்டு அந்த சட்டத்தால் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்கிற பொய்யை கூறுவதை ஏற்க முடியாது.அது கண்டிக்கத்தக்கது. 28 ஆம் தேதி முதல் நவம்பர் 4 ஆம் தேதி வரை மண்டல அளவில் தஞ்சை,விழுப்புரம், சேலம்,சென்னை ஆகிய இடங்களில் விவசாய சட்டம், தொழிலாளர் விரோத சட்சம் ஆகியவை குறித்து விவசாயிகள் தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநாடு நடத்த உள்ளோம்.

நவம்பர் 26 ஆம் தேதி விவசாய சட்டம்,தொழிலாளர் விரோத சட்டம்,சுற்றுச்சூழல் திருத்த சட்டம் ஆகியவற்றை எதிர்த்து பொது வேலை நிறுத்த போராட்டம் அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்துகிறது. முதலமைச்சர் தாயார் இரங்கலுக்கு அமித்ஷா இந்தியில் இரங்கல் வெளியிட்டது அவரது மொழி வெறியை காட்டுக்கிறது. வரி கட்டாமல் ரஜினி மேல்முறையீடு செய்வது ஏதும் சலுகை கிடைக்குமா என்கிற எதிர்ப்பார்பில் அவர் செய்யலாம்.ஒருவேளை ரஜினிக்கும் அ.தி.மு.க விற்கும் ரகசிய உறவு இருக்கலாம்.

அதன் மூலம் அவர் சலுகை கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். அ.தி.மு.க ஒன்றாக இருக்க வேண்டுமா இரண்டாக இருக்க வேண்டுமா ?அ.தி.மு.க விற்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டுமா என்பதை பா.ஜ.க தான் முடிவு செய்யும். முத்தையா முரளிதரன் வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை எதிர்ப்பது என்பது பல விவகாரங்களை திசை திருப்பும் வகையில் உள்ளது.வேறு பல பிரச்சனைகள் இருக்கும் போது இது குறித்து விமர்சனம் செய்வது தேவையற்றது.

தி.மு.க தலைமையிலான கூட்டணி பலமாகவும் வலுவாகவும் உள்ளது.இந்த கூட்டணி சட்டமன்ற தேர்தலை சந்தித்து வெற்றி பெறும். அண்ணா பல்கலைக்கழகம் உலக புகழ் வாய்ந்த பல்கலைக்கழகம்.அதை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. பல்கலைக்கழக துணைவேந்தர் நேரடியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார்.அது கடும் கண்டனத்திற்குரியது. பதவி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 37

0

0