வழக்கறிஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்று அவமரியாதை: அச்சிறுப்பாக்கத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
Author: kavin kumar28 October 2021, 5:09 pm
செங்கல்பட்டு: எந்த ஒரு புகாரும் இல்லாமல் வழக்கறிஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்று அவமரியாதை செய்த காவல் ஆய்வாளரை கண்டித்து அச்சிறுப்பாக்கம் அருகே ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பகுதியில் உள்ள காட்டு கூடலூர் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் தசரதன்.இவர் மீது எந்தவித புகாரும் இல்லாத நிலையில் நேற்று அச்சிறுப்பாக்கம் காவல்நிலையம் அழைத்து வந்து அவமரியாதை செய்ததாக அச்சிறுப்பாக்கம் உதவி ஆய்வாளர்கள் நந்தகுமார் , புஷ்பகரன் மற்றும் காவலர்கள் ரவிவர்மன், கார்த்திக் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவர்களுக்கு எதிராக நகர் முழுவதும் ஒட்டப்பட்டால் சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
Views: - 134
0
0