திமுகவிற்கு தகுந்த பாடம் புகட்டி தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்: வேலூர் இப்ராஹிம் பேச்சு…

Author: Udhayakumar Raman
25 March 2021, 2:07 pm
Quick Share

நீலகிரி: இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரத்துவத்துடன் இருக்கும் நிலையில் நம்மை பிரிக்கும் தீய சக்திகளான திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு தகுந்த பாடம் புகட்டி இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டுமென தமிழக ஏகத்துவ ஜமாஅத்தின் மாநிலத் தலைவர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.

உதகை சட்டமன்றத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து தமிழக ஏகத்துவ ஜமாஅத்தின் மாநிலத் தலைவர் வேலூர் இப்ராஹிம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து பட்டியலிட்டு பேசினார். பிரச்சாரத்திற்கு பின்பு உதகை அருகே உள்ள மெயின் பஜார் பகுதியில் சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் வீடு வீடாக சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். மேலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்களை கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

குறிப்பாக இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில், திமுக செயல்பட்டு வருவதாக கூறிய அவர், குறிப்பாக பாரதப் பிரதமர் சிறுபான்மையினருக்காக 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் திட்டங்களுக்கு ஒதுக்கி முன்பிருந்த காங்கிரசை விட இரண்டு மடங்காக மத்திய அரசு சிறுபான்மையினருக்கு தனி கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செய்து வருவதாக கூறினார். இந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை நிச்சயம் மக்கள் புறக்கணிக்கும் நேரம் நெருங்கிவிட்டதாக வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.

Views: - 56

0

0