வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்

29 January 2021, 2:49 pm
Quick Share

திருவாரூர்: திருவாரூரில் மத்திய அரசு அறிவித்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர் நாகை புற வழிச்சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மத்திய அரசு அறிவித்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், விவசாய கடனை தள்ளுபடி செய்யக் கோரியும், டெல்லியில் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், டெல்டா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வடிவழகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

Views: - 0

0

0