கல்லாவில் பணம் எடுத்தவரிடம் தட்டிகேட்டவரை கத்தியால் குத்தி கொலை

Author: Udhayakumar Raman
26 September 2021, 2:54 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி அருகே சிக்கன் ரைஸ் கடையில் உள்ள கல்லாவில் பணம் எடுத்தவரிடம் தட்டிகேட்டவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தருமபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த மல்லாபுரத்தை சேர்ந்த அண்ணாதுரை கூலி தொழிலாளி இவருடைய மனைவி புஷ்பா இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் ஓர் ஆண்டுக்கு முன் மல்லாபுரத்தில் உள்ள ஒரு சிக்கன் கடையில் பணி செய்து வந்தார். இதனையடுத்து அவர் தற்போது தருமபுரியில் உள்ள ஹலோபிரிக்ஸ் கம்பெனியில் பணி செய்கிறார். இந்த நிலையில், இன்று ஓர் ஆண்டுக்கு முன் வேலை பார்த்த சிக்கன் ரைஸ் கடைக்கு அண்ணாதுரை சென்றுள்ளார். அப்போது அங்கு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த சோளப்பாடியை சேர்ந்த குமார் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கல்லாபெட்டியில் உள்ள பணத்தை எடுக்க முயன்றுள்ளார்.

அதற்கு அண்ணாதுரை நீ என்ன ரெளடியா என தட்டிக்கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் ஏற்பட்ட வாய் தகராறில் ஆத்திரமடைந்த குமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அண்ணாதுரையின் வயிற்று பகுதியில் குத்தியதில் கத்திக்குத்து காயத்துடன் இருந்த அண்ணாதுரையை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு சிகிச்சைக்காக சேர்த்துனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சேலத்திற்கு கொண்டு செல்லும் வழியிலே அண்ணாதுரை உயிரிழந்தார். இதனையடுத்து கத்தியால் குத்திய குமார் மற்றும் அவரது நண்பரையும் இண்டூர் போலீசார் கைது செய்து செய்து விசாரணை செய்கின்றனர்.

Views: - 218

0

0