தள்ளுவண்டியில் உணவகம் நடத்தி வந்த நபர் அரிவாளால் வெட்டி படுகொலை: மர்ம கும்பலுக்கு போலீசார் வலை

Author: Udhayakumar Raman
9 September 2021, 2:31 pm
Quick Share

திருவள்ளூர்: ஆரம்பாக்கம் அருகே தள்ளுவண்டியில் உணவகம் நடத்தி வந்தவரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே உள்ள துராப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் தள்ளு வண்டியில் உணவகம் நடத்தி வந்தார். இவரை மர்மகும்பல் சரமாரியாக வெட்டிக்கொலைசெய்தது படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த மோகனின் உடலை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு ஆரம்பாக்கம் போலீசார் அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்டு உயிரிழந்த மோகனின் மகன் ஜீவானந்தம் அவரதுநண்பர்கள் இடையே சிலருக்கு நேற்று கும்மிடிபூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வாக்கு வாதம் ஏற்பட்டு பிரச்சினை ஏற்பட்டுள்ளது அந்த மோதல் சம்பவம் காரணமாக ஜீவானந்தம் வீட்டில் இல்லாததால் அவரது தந்தையை ஆத்திரத்தில்வெட்டிக் கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமாக?மோகனை கொலை செய்தனரா என்ற கோணத்திலும் ஆரம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைமேற்கொண்டு மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

Views: - 90

0

0