நகை பட்டறையில் வேலை செய்யும் நபர் 19 சவரன் நகையுடன் தப்பி ஓட்டம்
Author: kavin kumar31 July 2021, 9:57 pm
சென்னை: புளியந்தோப்பு அருகே நகை பட்டறையில் வேலை செய்யும் நபர் 19 சவரன் நகையுடன் தங்க நகையுடன் தப்பி ஓடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதியில் வசித்து வருபவர் வினோத்குமார். இவர் அதே பகுதியில் நகை செய்யும் தொழில் செய்து வருகிறார். தனது மனைவி லலிதா என்ற பெயரில் புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் கடந்த 3 வருடங்களாக நகை செய்யும் பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் சுமார் பத்து நபர்கள் வேலை செய்து வருகின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு இவரது பட்டறையில் மேற்கு வங்காளம் பகுதியை சேர்ந்த ரம்ஜான் அலி என்ற நபர் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
அவரிடம் கடந்த 29 ம் தேதி தங்க செயினை கடையின் உரிமையாளர் வினோத்குமார் கொடுத்து பாலிஷ் போடும்படி கூறி அனுப்பியுள்ளார்.
பாலிஷ் அறைக்கு சென்ற நபர் வெகுநேரமாகியும் பாலிஷ் போடும் ரூமை விட்டு வெளியே வராததால், பாலிஷ் போடும் அறையை சென்று பார்த்த போது அப்போது பட்டறையில் இருந்த 150 கிராம் நகை காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து வினோத்குமார் ரம்ஜான் அலிக்கு போன் செய்த போது போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதனையடுத்து கடையின் உரிமையாளர் வினோத்குமார் இது சம்பந்தமாக புளியந்தோப்பு குற்றப்பிரிவில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0
0