டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்கம்பியை பிடித்த மனநலம் பாதித்த நபர்: கடைசியில் அவருக்கு நேர்ந்தது என்ன தெரியுமா..?

21 June 2021, 6:57 pm
Quick Share

மயிலாடுதுறை: மணல்மேடு அருகே மனநலம் பாதித்த நபர் மின்சாரக் டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்கம்பியை பிடித்ததில், மின்சாரம் தாக்கி உடலில் தீப்பற்றிய நிலையில் உயிரிழந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே இளந்தோப்பு ஊராட்சி வடவாஞ்சாறு கிராமத்தை சேர்ந்த கலையரசன் (32) என்பவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பிய கலையரசன் வீட்டில் . கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் மனவேதனையில் இருந்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த கலையரசன், நேற்று தனது நண்பர்களுடன் பேசும்போது தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.

இன்று தனது வீட்டின் எதிரே உள்ள மின்கம்பத்தில் ஏறி மின் கம்பியை பிடித்ததில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணல்மேடு போலீசார் உயிரிழந்தவரின் சடலத்தை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 83

0

0