மின்வழி பாதை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்த அமைச்சர்…

By: Udayaraman
31 July 2021, 2:31 pm
Quick Share

அரியலூர்: பொய்யாதநல்லூர் கிராமத்தில் 2.5 கோடி மதிப்பில் மின்வழி பாதை அமைக்கும் பணியினை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமத்தில் புதிய துணை மின் நிலையம் அமைப்பதற்கான பணிகள் இன்று நடைப்பெற்றது. இதனை பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் 33 கேவி திறன்கொண்ட துணைமின் நிலையம் அமைக்கபட உள்ளதாக தெரிவிக்கபட்டது. இதன்மூலம் தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்கும் என்றும் 30 ஆயிரம் மின் நுகர்வோர்கள் பயன்பெற உள்ளதாக கூறப்பட்டது. இதில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா மற்றும் மின்வாரிய அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Views: - 92

0

0