கோரிக்கை வைத்த சில நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற நகராட்சி ஆணையர்…

4 September 2020, 9:55 pm
Quick Share

கரூர்: குளித்தலை அருகே பேராளம்மன் கோவில் தெருவில் மக்கள் குடியிருப்பு பகுதியில் மிகவும் மோசமான நிலையில், விழுந்து கொண்டிருக்கும் கட்டிடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு சில நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற நகராட்சி ஆணையர்.

கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட பேராளம்மன் கோவில் தெரு கடைவீதி பகுதியின் பின்புறம் சாக்கடையை ஒட்டி குறுகிய பாதை அமைந்துள்ளது. இதன் வழியாக மழைக்காலங்களில் சாக்கடை கழிவு நீரானது நிரம்பி மழைநீருடன் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் தேங்கியும் குடியிருப்பு பகுதியில் புகுந்தும் அசிங்கத்தையும் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் கொசு தொல்லையும் தொற்று நோயும் உண்டாவதால் மக்கள் அந்த வழியாக நடந்து வர சிரமப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இது சம்பந்தமாக ஏற்கனவே ஒருமுறை நகராட்சிக்கு தகவல் தெரிவித்ததாகவும், நகராட்சி சுகாதார ஆய்வாளர் பார்வையில் சிமெண்ட் பாதை அமைத்து தருவதாக கூறியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் குளித்தலை நகராட்சியில் புதியதாக பொறுப்பேற்ற நகராட்சி ஆணையர் முத்துக்குமார் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவை ஏற்ற ஒரு சில நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாகவும், அதேபோல் அந்தப் பாதையின் ஒட்டியுள்ள மிகப்பழமையான கட்டிடம் இடிந்து விழும் சூழலில் உள்ளதால் மழைக்காலங்களில் எந்நேரமும் குடியிருப்பு பகுதிகளில் மேலே விழும் அபாய நிலையில் உள்ளதால் உடனடியாக சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் தகவல் தெரிவித்து கட்டிடத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி ஆணையர் குறிப்பிட்டார்.

Views: - 8

0

0