நவம்பர் மாதம் முதல் பிற மாநிலத்தவர்களுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தப்படும்: தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் பேட்டி …

18 September 2020, 4:06 pm
Quick Share

திருச்சி: நவம்பர் மாதம் முதல் பிற மாநிலத்தவர்களுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தப்படும் என தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் தெரிவித்துள்ளார்.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வடமாநிலத்தவர் வேலைக்கு அமர்த்துவதை கண்டித்து தமிழ் தேசிய பேரியக்கத்தின் சார்பில் பொன்மலை பணிமனை முன்பு 1 வாரமாக தொடர் போராட்டம் நடைபெற்றது. ஏழாவது நாளாக இன்று மணியரசன் தலைமையில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் ரயில்வேயில் பயிற்சி முடித்த மாணவர்கள் உட்பட 200க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பினர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மணியரசன், கொரோனா காலத்தில் வடநாட்டை சேர்ந்தவர்களை தென்னக ரயில்வேயில் 3,128 பேர் சேர்த்துள்ளனர். இதில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் மட்டும் 541 பணியில் சேர்ந்துள்ளனர். இதில் 400க்கு மேற்பட்டவர்கள் ஹிந்திகார்கள். தமிழக முதல்வர் குரல் கொடுக்கவில்லை, தமிழக அரசியலில் சரியான குரல் இல்லை என்றார். மேலும் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் பிற மாநிலத்தவர் கெதிரான ஒத்துழையாமை இயக்கத்தை தமிழ்நாட்டில் நடத்தப்போவதாக தெரிவித்தார்.