தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மர்மமான முறையில் உயிரிழப்பு…
14 August 2020, 7:26 pmஈரோடு: ஈரோடு அருகே தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஈரோடு மாவட்டம் பூந்துறை அருகே லிங்ககவுண்டன்வலசு பகுதியில் பாவத்தாள் என்ற மூதாட்டி தனது சொந்த தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் வழக்கமாக காலை அக்கம்பக்கத்தினர் மூதாட்டி வீட்டிற்கு சென்று பார்த்தபோது மூதாட்டி பாவளத்தாள் முகத்தை துணியால் கட்டி கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு உறவினர்கள் மற்றும் அரச்சலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாயுடன் வந்த காவல்துறையினர் கொலையாளியை தேடி வந்தனர் மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.