திருச்சி காந்தி மார்க்கெட் திறப்பு தேதி முதல்வர் சந்திப்பிற்கு பின் அறிவிக்கப்படும்: மாநில தலைவர் விக்கிரமராஜா பேட்டி…

31 August 2020, 4:19 pm
Quick Share

திருச்சி: திருச்சி காந்தி மார்க்கெட் திறப்பு தேதி முதல்வர் சந்திப்பிற்கு பின் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

திருச்சி காந்தி மார்க்கெட்டை மீண்டும் திறக்க தமிழக அரசை வலியுறுத்துவதற்கான ஆலோசனை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டம் பால்பண்ணை வெங்காய மார்க்கெட்டில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பல்வேறு கருத்துகளையும் கோரிகைகளையும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதவாது:-

திருச்சி காந்தி மார்க்கெட் என்பது 15ஆயிரம் பேரின் வாழ்வாதார பிரச்சினை. திருச்சி காந்தி மார்க்கெட் திறப்பு சம்பந்தமாக தமிழக முதல்வருக்கு அழுத்தம் தரப்பட்டு திறப்பதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். புதிதாக கட்டப்பட்ட கள்ளிக்குடி மார்க்கெட்டில் 300 கடைகளே உள்ளன. ஆனால் காந்தி மார்க்கெட்டில் 2 ஆயிரம் வியாபாரிகள் உள்ளனர். இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்த போது திருச்சி காந்தி மார்க்கெட் திறக்கப்படும் என்று தீர்க்கமாக கூறி உள்ளார். தற்போது கோயம்பேடு செப்பனிடும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.

இப்பணியில் சுமார் ஆயிரம் பேர் ஈடுபட்டு வருகிறார்கள். 18ம் தேதி ஒரு பகுதியும் பின்னர் படிப்படியாக கோயம்பேடு மார்க்கெட்டின் அனைத்து பகுதிகளும் திறக்கப்படும். அதே போல திருச்சி காந்தி மார்கெட் திறப்பு தேதி முதல்வர் சந்திப்பிற்கு பின் அறிவிக்கப்படும். வழக்கமான நேரங்களில் மார்கெட்டுகள் திறந்திருந்தால் கூட்டம் கூடாது. கொரோனா ஊரடங்கின் போது பாதிக்கப்பட்டு உயிரிழந்த வியாபாரிகளுக்கு அரசு நஷ்டஈடாக 10லட்சம் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 5

0

0