குமரிக்கு வந்தடைந்தது துணை ராணுவம்.!பணப்பட்டுவாடா ஆசாமிகளே உசார்

1 March 2021, 1:34 pm
Quick Share

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மணிப்பூர் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த துணை ராணுவ வீரர்கள் 90 பேர் குமரி மாவட்டம் நாகர்கோவில் வந்தடைந்தனர்.

தமிழக சட்ட மன்ற தேர்தல் தேதி அறிவிக்கபட்டதை தொடர்ந்து தேர்தல் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. தேர்தல் சம்பந்தமாக பாதுகாப்பு பணிகள், பணப்பட்டுவாடா தொடர்பான கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக மணிப்பூர் எல்லையில் இருந்து எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த துணை கமாண்டர் நவீன் ஜக்சார் தலைமையில் 90 வீரர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வந்தனர். தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் மேலும் பாதுகாப்பு படை வீரர்கள் தேர்தல் பணிக்காக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர். இன்று முதல் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Views: - 2

0

0