கமலாலயத்தில் குளத்தில் தென்கரையிலுள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து
Author: kavin kumar25 October 2021, 4:24 pm
திருவாரூர்: திருவாரூர் வரலாற்று சிறப்புமிக்க கமலாலயத்தில் குளத்தில் தென்கரையிலுள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் உலக பிரசித்தி பெற்ற தியாகராஜ சுவாமி திருக்கோயிலுக்கு எதிர்ப்புறம் உள்ள கமலாலயக் குளம் மிகவும் பழமை வாய்ந்தது தீர்த்த குள்ளமாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக பெய்த கனமழை காரணமாக இன்று நகராட்சி எதிர்ப்புறம் உள்ள சுற்றுச்சுவர் 100மீட்டர் அளவிற்கு இடிந்து விழுந்தது குளத்திலே இடிந்து விழுந்ததால் பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு. குளத்தை சுற்றி உள்ள நான்கு வீதிகளிலும் உள்ள சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.இதேபோல் 2013ம் ஆண்டு குளத்தின் வடக்குப் பகுதியில் உள்ள கரை விழுந்து விழுந்தது குறிப்பிடதக்கது.இந்து சமய அறநிலையத்துறை நான்கு கரைகளையும் பலப்படுத்தி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
0
0