பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது

12 July 2021, 3:57 pm
Quick Share

தேனி: பெரியகுளம் பகுதியில் தொடர் வழிப்பறி கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட வைகை அணை சாலையில் நின்று கொண்டிருந்த தேனியைச் சேர்ந்த தமிழன் என்பவரிடம் கத்தியால் குத்தி காயப்படுத்தி விட்டு வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு பணம் மற்றும் செல்போன் உள்ளிட்டவைகளை பரித்து சென்றதை அடுத்து இதே போன்று மேலும் பல குற்ற்ச்சம்பவங்களில் ஈடு பட்டு வந்த ஜெயமங்கலம் காந்தி நகரைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் என்பவர் மீது தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ் டோஸ்ரே அவர்களின் பரிந்துரையின் பேரில் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் அவர்கள் உத்தரவின் பேரில் சூரிய பிரகாஷ் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 135

0

0