மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து வாகனத்தில் சென்றவர் படுகாயம்…

15 August 2020, 10:27 pm
Quick Share

திருவள்ளூர்: மாதவரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கி படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாதவரம் மூலக்கடை மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த மாதவன் என்பவர் மீது காற்றாடி மாஞ்சா நூல் அறுந்து விழுந்ததில் கழுத்து அறுபட்ட நிலையில் ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அனுமதித்தக்கட்டனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் மாஞ்சா நூலில் சிக்கி கழுத்து அறுபட்ட சம்பவம் குறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து மாதவரம், மணலி, புழல், செங்குன்றம் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளில் காற்றாடி மாஞ்சா நூல் புழக்கத்தில் இருப்பதை காவல்துறையினர் உரிய முறையில் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளாததால் இத்தகைய சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது வேதனைக்கு உரியதாக உள்ளது.

Views: - 30

0

0