காரில் சாராயம் கடத்தி வந்த நபர் கைது

8 February 2021, 2:19 pm
Quick Share

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே காரில் சாராயம் கடத்தி வந்த நபரை பாலையூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் காவல் சரத்திற்கு உட்பட்ட ஸ்ரீகண்டபுரத்தில் பாண்டி சாராயம் காரில் கடத்தி வருவதாக ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அதன் பேரில் பாலையூர் போலீசார் பாலையூர் சரகத்திற்கு உட்பட்ட ஸ்ரீ கண்டபுரம் கடைத்தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து வழுவூர் தோப்பு தெருவை சேர்ந்த ராம்கி என்பவர் காரில் சுமார் 1.100 லிட்டர் கொண்ட 11,000 பாக்கெட்டுகள் பாண்டி சாராயம் கடத்திச் சென்றுள்ளார். அவரது கார் மற்றும் சாராய பாக்கெட்டுகளை பாலையூர் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் காரில் கடத்தி வந்த ராம்கி என்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 0

0

0