விடுதி ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை; தடுக்க சென்ற அதிமுக நகர செயலாளருக்கு கத்தி குத்து…

11 August 2020, 11:42 pm
Quick Share

நாகப்பட்டினம்: நாகை அருகே விடுதி ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதனை தடுக்க சென்ற அதிமுக நகர செயலாளருக்கு கத்தி குத்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் சுற்றுலா தளம் என்பது அங்கு செயல்படும் 100கணக்கான விடுதிகளில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டதால் ஊழியர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ள நிலையில் குறைவான ஊழியர்கள் அந்தந்த விடுதிகளில் தங்கி லாட்ஜ் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வேளாங்கண்ணி மாதா குளம் அருகே செயல்படும் தனியாருக்கு சொந்தமான ஜான்சன் பார்க் என்ற தனியார் விடுதியில் வெளி ஊரை சேர்ந்த நபர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், அந்த விடுதியில் வேலை செய்துவந்த கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த முகேஷ் 32/20 (மலையாளி) என்பவர், சேலத்தைச் சேர்ந்த சதீஷ் 32/20 என்பவரை தன்னுடன் வேலைக்கு சேர்த்துள்ளார். இந்த நிலையில் சதிஷ் தொடர்ந்து முகேஷிடம் குடித்துவிட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று மாலை விடுதியில் இருந்த இருவருக்கும் இசையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் வாய்த்தகராறு கைகலப்பாக மாறவே, முகேஷ் தான் வைத்திருந்த கத்தியால் சதீஷின் இடது பக்க மார்பு, இடது பக்க விலா மற்றும் இடது முன் கை ஆகிய இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சதிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே சண்டையை சமாதானம் செய்து தடுக்க முயன்ற வேளாங்கண்ணி அதிமுக நகர செயலாளர் சாம்சன் பிராங்கிளினிக்கு வயிற்றில் கத்தியால் குத்தபட்டதால், அவர் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே கொலை செய்த முகேஷ், வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த வேளாங்கண்ணி போலீசார் சதிஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஊரடங்கு நேரத்திலும் தமிழக அரசின் உத்தரவை மீறி வேளாங்கண்ணி பகுதியில் பல விடுதிகள் திறக்கப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டிகின்றனர்.

Views: - 11

0

0