ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட நபர்

27 November 2020, 3:15 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டவரை தீயணைப்பு மற்றும் போலீசார் தேடி வருகின்றனர்

திருவள்ளூர் மாவட்டம் பெருவாயல் கிராமத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம். கூலி தொழிலாளியான இவரது மகன் ராஜாமணி காலையில் தனது நண்பர்கள் ஐந்து பேருடன் புதுவாயல் மேம்பாலத்தில் இருந்து குதித்து ஆரணி ஆற்றில் வெள்ள நீரில் விளையாடியபோது, ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டார். அதில் நான்கு பேரும் நீந்தி கரை சேர்ந்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் மற்றும் கவரப்பேட்டை போலீசார் ராஜா மணியை தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் நீர்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு உபரி நீர் 7600 கன அடி திறக்கப்பட்டுள்ளதால், தொடர்ந்து ஆற்றில் இறங்கி யாரும் குளிக்கக்கூடாது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்தும் நிலையில் இளைஞர் வெள்ளநீரில் அடித்து செல்லபட்டது குறிப்பிடதக்கது.

Views: - 0

0

0