சுதந்திர தின விழா பொது நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கலந்து கொள்ள தடை…

14 August 2020, 11:20 pm
Quick Share

நீலகிரி : கொரோனா தொற்று காரணமாக நாளை நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் பொது நிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளவும் தடை எனவும், நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் நாளை நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சி அரசு அறிவித்தபடி எளிமையான முறையில் நடைபெறும் குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால் இந் நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்துக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறினார். கடந்த ஏழு நாட்களாக பெய்த கனமழையின் போது அனைத்து துறையினரும் மீட்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றினர் என கூறினார்.

மேலும் கனமழை மற்றும் பலத்த காற்றினால் சேதமடைந்த மின்கம்பங்கள் அனைத்தும் 100 சதவீதம் சரி செய்தும் அனைத்து பகுதிகளிலும் மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒரு சில இடங்களில் சேதமடைந்த கம்பிகளை பகல் நேரங்களில் மட்டும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாக ஆட்சியர் தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும்,

தற்சமயம் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவர பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டுமெனவும், பொது நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும் கனமழையின் காரணமாக 5 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மீட்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு மாற்று குடியிருப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக ஆட்சியர் தெரிவித்தார்.

Views: - 29

0

0