மின்வாரிய ஊழியரை மனித கோபுரம் அமைத்து காப்பாற்றிய பொதுமக்கள்

31 January 2021, 3:54 pm
Quick Share

திருப்பூர்: தாராபுரத்தில் மின்சாரம் தாக்கி கம்பியில் தலைகீழாக தொங்கி கொண்டிருந்த மின்வாரிய ஊழியரை மனித கோபுரம் அமைத்து பொதுமக்கள் காப்பாற்றிய காட்சி சமூக வலைதளங்கள் வைரலாகி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா கட்டத்துரை ஊரைச் சேர்ந்தவர் நாகராஜ் இவரது மகன் கோவிந்தசாமி வயது 30. இவர் தாராபுரத்தில் தங்கி தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் தனியார் ஒப்பந்ததாரரிடம் திருவிளக்கு பகுதிக்கும் வேலையை செய்து வருகிறார். நேற்று மாலை ஆறு முப்பது மணி அளவில் தாராபுரம் புறவழிச்சாலை காந்திநகர் பகுதியில் கம்பத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது கோவிந்தசாமி திடீரென மின்சாரம் தாக்கியதில் மின் கம்பத்தின் மேல் மயக்கமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு எடுத்து தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தாராபுரம் காந்திநகர் பகுதியில் புதிதாக கட்டப்படும் கட்டிடத்திற்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக காந்திபுரம் பகுதியில் சப்ளை நிறுத்திவிட்டு கம்பத்தின் மேல் ஏறி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஆறு முப்பது மணி அளவில் ஆன் ஆன உடன் தானியங்கி இயந்திரத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள தெரு விளக்கு கம்பங்களுக்கு மின்சாரம் வருவது வழக்கமாக இருந்தது. தானியங்கி மூலம் தெரு விளக்கு கம்பங்களுக்கு மின்சாரம் வந்து எதிர்பாராத விதமாக கம்பத்தின் மேல் பணியாற்றிக்கொண்டிருந்த கோவிந்தசாமி உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்து அலறியபடி கோவிந்தசாமி கம்பத்தின் மேல் மயக்கமடைந்தார்.

பிறகு பொதுமக்கள் உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தாராபுரம் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தாராபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Views: - 0

0

0