சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர் போக்சோ சட்டத்தில் கைது

7 July 2021, 4:56 pm
Quick Share

சென்னை: ஓட்டேரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சென்னை ஓட்டேரி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 8 வயது மகளுக்கு பெரியப்பா முறை வரும் டில்லிபாபு என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சம்பவம் தொடர்பாக ஓட்டேரி மேட்டுப்பாளையம் கந்தன் தெரு பகுதியை சேர்ந்த டில்லிபாபு என்பவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து டில்லி பாபு போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

Views: - 137

0

0