ஆயுள் கைதிகள் விடுதலை நாட்டுக்கே எதிரானது: பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி பேட்டி

Author: Udhayakumar Raman
14 September 2021, 1:31 pm
Quick Share

திருச்சி: அண்ணா பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வதாக அறிவித்திருப்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே எதிரானது என பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி தெரிவித்தார்.

திருச்சியில் இன்று பா.ஜ.க மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக பொறுப்பாளரும் தேசிய பொதுச்செயலாளருமான சி.டி.ரவி, நிர்வாகிகள் எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சி.டி.ரவி பேசியதாவது;-திமுக அரசின் தேன்நிலவு காலம் முடிந்து விட்டது. மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதை விட மத்திய அரசுக்கு எதிரான பிரச்சாரத்தை மட்டுமே திமுக முன்னெடுத்து வருகிறது. பிரதமர் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக மட்டுமே பேசி வருகிறார்கள்.

நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுக அரசு அண்ணா பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வதாக அறிவித்திருப்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே எதிரானது. இது ஆபத்தான முடிவு. தேசவிரோத செயலாகும். நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். இதை மறைத்து, திமுக எதிர்மறைப் பிரச்சாரம் செய்கிறது. சட்டப்பேரவையில் இன்று நீட் எதிர்ப்பு மசோதாவை அதிமுக, பா.ம.க ஆதரித்துள்ளது, அவர்கள் கட்சியின் நிலை. ஆனால், பா.ஜ.க கூட்டணியில் அவர்கள் உள்ளனர்.

சிஏஏ மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. பலமுறை பாரத பிரதமர் சிஏஏ சட்டம் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என தெரிவித்துள்ளார்.இது குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க தயாராக உள்ளோம் ஆனால் அவர்கள் யாரும் தயாராக இல்லை. இந்த சிஏஏ எதிர்ப்பு பிரச்சாரம் 5 மாநில தேர்தலுக்கு பின்பு ஒன்றுமில்லாமல் போய்விடும் சிஏஏ தொடர்பான போராட்டங்களும் முடிவுக்கு வரும். 3 வேளாண் சட்டங்கள் விவசாயிகள் எதிரானதல்ல விவசாயிகளுக்கு ஆதரவான சட்டங்கள் எதிர்க்கட்சியினர் வேளாண் சட்டங்களை விவசாயிகளுக்கு எதிரானது என்பதை மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

திமுக பாஜகவை ஹிந்துவுக்கு விரோதமாகவும், தமிழ் கலாச்சாரத்திற்கு விரோதமான கட்சி என கட்டமைக்க முயற்சிக்கிறது. அதற்கு தமிழக மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள். சட்டமன்றத்தில் எங்களுக்கு 4 எம்எல்ஏக்களும் கட்சியில் பல நிர்வாகிகள் உள்ளனர். இவர்கள் இந்த ஹிந்து விரோத செயல்படு மற்றும் தமிழ் கலாச்சாரத்தை விரோதமாக செயல்படும் கட்டமைப்பு ஏற்படுத்தும் திமுகவுக்கு எதிராகப் போராடுவார்கள் என தெரிவித்தார். 9மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க நிச்சயம் போட்டியிடும். தனித்தா? கூட்டணியா? என்பதை மாநில நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் என தெரிவித்தார்.

Views: - 116

0

0