ஊஞ்சலில் விளையாடிய பள்ளி சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு

16 April 2021, 6:47 pm
Quick Share

விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே ஊஞ்சலில் விளையாடிய பள்ளி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் தனராஜன் மகன் யோகேஷ் வயது 13, இவர் தனது வீட்டில் உள்ள மரத்தில் ஊஞ்சல் கட்டி விளையாடி வந்தார். அப்போது தவறுதலாக கீழே விழுந்த போது எதிர்பாராதவிதமாக ஊஞ்சல் கயிறு கழுத்தில் சுற்றிக் கொண்டது. இதனால் துடிதுடித்து அங்கேயே இறந்து விட்டார். சில மணிநேரங்கள் கழித்து விளையாடிக்கொண்டிருந்த குழந்தையின் சத்தம் கேட்காததால் அவருடைய பெற்றோர்கள் விளையாடி இடத்தில் சென்று பார்த்தபோது அங்கு ஊஞ்சல் கயிற்றில் மாட்டிக்கொண்டு இறந்தது தெரியவந்தது.

அவர் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு யோகேஷ் கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அவர் பெற்றோர்கள் உறவினர்கள் அவர் இறந்தது குறித்து கண்ணீர் மல்க அழுதது பார்ப்போர் மனதை பத பதைக்க வைத்தது. இதுகுறித்து அரகண்டநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யோகேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 61

0

0