ஜோசியரிடம் தாலி சங்கிலியை பறிகொடுத்த விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

Author: kavin kumar
12 October 2021, 6:31 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் ஜோசியரிடம் தாலி சங்கிலியை பறிகொடுத்த விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் பாரதி தெருவை சேர்ந்த ஜெகன் என்பவரின் மனைவி சுகந்தி.இவர்களுக்கு ஒரு ஆண்டு முன் தான் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 8மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 14ம் தேதி ஜோசியம் கூறுவதாக சொல்லி 35 வயது மதிக்கத்தக்க முன்பின் தெரியாத ஆசாமி ஒருவர் சுகந்தி வீட்டிற்கு வந்தார். அப்பொழுது சுகந்தியின் கவனத்தை திசை திருப்பி தாலி சங்கிலி மற்றும் தங்க நாணயங்களை அந்த மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்த சுகந்தி வீட்டில் பரும் இல்லாத போது சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் விரைந்து சென்று உடலை கைப்பற்றிய சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 224

0

0