ரயில்வே போலீசாரிடம் செல்போன் திருடிய திருடன்: மடக்கிப் பிடித்த ரயில்வே போலீசார்…

Author: Udhayakumar Raman
6 August 2021, 10:28 pm
Quick Share

சென்னை: சென்னையில் ரயில்வே போலீசாரிடம் செல்போன் திருடிய திருடனை ரயில்வே போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

காட்பாடி பகுதியை சேர்ந்தவர் உமாபதி வயது 32. இவர் கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் காட்பாடியிலிருந்து சென்ட்ரல் செல்லும் அதிவிரைவு ரயிலில் வந்து கொண்டிருந்தார். வியாசர்பாடி பகுதியில் ரயில் வரும் போது வண்டி மெதுவாக சென்றது. அப்போது அங்கு இருந்த மர்ம நபர் ஒருவர் உமாபதியிடம் இருந்து  செல்போனை பிடுங்கிக் கொண்டு ஓட முயற்சித்தார். உமாபதி அவரை பின் தொடர்ந்து சென்று அங்கேயே மடக்கிப் பிடித்தார்.

அதன் பிறகு பெரம்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பூர் ரயில்வே போலீசார் அந்த நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அந்த நபர் வியாசர்பாடி ஜே.ஜே நகர் 2 வது தெருவை சேர்ந்த மணி என்கின்ற மணிகண்டன் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்த போலீசார் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 154

0

0

PureVPN Review