சீட்டு கம்பெனி நடத்தி ரூ. 8 கோடி வரை மோசடி: தனியார் நிறுவனத்தை பாதிக்கப்பட்டோர் முற்றுகை

30 November 2020, 4:05 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் சீட்டு கம்பெனி நடத்தி ரூ. 8 கோடி வரை ஏமாற்றிய தனியார் நிறுவனத்தை பாதிக்கப்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். இவர் அதே பகுதியில் சீட்டு கம்பெனி நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் குலுக்கல் சீட்டு, மற்றும் மாதத்திர சீட்டு நடத்தி வந்தார். மேலும் வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணத்திற்கு இரட்டிபாக பணம் வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறி பணத்தை பெற்று வந்துள்ளார். இதனை நம்பி 500க்கும் மேற்பட்டோர் சஞ்சீவ் குமார், மற்றும் அவரது தம்பி பிரகாஷ் ஆகியோரிடம் பல்வேறு திட்டங்களில் கீழ் சேர்ந்து மாதத்தோறும் பணம் செலுத்தி தற்போது 8 கோடி வரை பணம் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு பணம் கட்டியவர்களுக்கு தர வேண்டிய தொகையை சஞ்சீவ் குமார் வழங்கவில்லை இது குறித்து பணம் கட்டியவர்கள் அவரிடம் கேட்ட போது மார்ச் மாதம் தருவதாக தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று காரணமாக நிறுவனத்தை திறக்கமால் மூடி விட்டார். இதனை தொடர்ந்து தற்போது அவரை தொடர்பு கொள்ள முயன்ற போது அவர் தலைமறைவாகிவிட்டார். பணம் குறித்து சஞ்சீவ் குமார் தம்பியான பிரகாஷ் குமார் என்பரிடம் கேட்டபோது அவரும் உரிய பதில் தராமல் தொடர்ந்து அலைக்கழித்து வருகிறார். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர் 50க்கும் மேற்பட்டோர் முத்தியால்பேட்டையில் உள்ள சஞ்சீவ்குமாரின் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த முத்தியால்பேட்டை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி செய்த சஞ்சீவ் குமாரின் தம்பி கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரியில் பல்வேறு சமூக ஆர்வலர்களுக்கு, தொண்டு நிறுவனம் நடத்தி வருபவர்களுக்கு நட்சத்திர ஓட்டலில் பிரமாண்டமாக செலவு செய்து விருது வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 14

0

0