குளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழந்த சோகம்

4 February 2021, 4:27 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே குளத்தில் நீரில் மூழ்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கோளூர் கிராமத்தை சேர்ந்தவர் அல்லா என்பவரது மகன் ராக்கேஷ்வரன் என்கிற மணி. இவர் அங்குள்ள பவானி அம்மன் கோவில் குளத்தில் கொக்கினை பிடிப்பதற்காக இறங்கியுள்ளார். அப்போது சேற்றில் சிக்கி தத்தளித்த அவர் மூச்சு திணறி பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரைஅருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முடியாமல் உடலை மீட்டனர் பின்னர் அவர் உயிர் இழந்தது குறித்து தகவல் அறிந்து வந்த திருப்பாலைவனம் போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். ஐடிஐ படித்த இளைஞர் குளத்தில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0