பட்டாசு திரி ஏற்றி சென்ற வாகனம் தீ பிடித்ததால் பரபரப்பு..!!

5 August 2020, 5:51 pm
Quick Share

கோவை: கோவையில் பட்டாசு திரி ஏற்றி சென்ற வாகனம் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை காமநாய்க்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன். பட்டாசு திரிகளை சிவகாசிக்கு பார்சல் அனுப்ப பிக்கப் வேன் மூலம் காந்திபுரம் பகுதி வந்துள்ளார்.அப்போது கோவை நஞ்சப்பா சாலையில் வந்தபோது வாகனத்தின் முன்புறம் புகை வந்துள்ளது.

இதனை தொடர்ந்து உடனடியாக வாகனத்தை ஓரமாக நிறுத்தினார். இருப்பினும் வாகனத்தின் முன்பக்கம் தீ பற்றி எறிய துவங்கியது. லேசான தீ வாகனத்தில் பற்றிய நிலையில் இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் வாகனங்களை தள்ளி சென்று பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினர்.

இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கபட்டதை தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீர் பீச்சி தீயை அணைத்தனர்.

இது குறுத்து காட்டூர் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பல்வேறு வணிக நிறுவனங்கள் மட்டும் கடைகள் செயல்பட்டு வரும் நஞ்சப்பா சாலையில் வாகனத்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் காரணமாக அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Views: - 6

0

0